×

ஆக்கிரமித்து வைத்திருந்த தோட்டத்தில் புகுந்து தேயிலை பறித்ததால் பரபரப்பு

கோத்தகிரி : கோத்தகிரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட இளித்துறை கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளின் தேயிலை தோட்டங்கள் பெட்டட்டி சுங்கம் பகுதியில் உள்ளது.சுமார் 20 ஏக்கர் கொண்ட இந்த தேயிலை தோட்டத்தை சென்னையை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனம் ஒன்று இளித்துரையில் உள்ள நில இடைத்தரகர்களை தொடர்பு கொண்டு போலி பத்திரம் தயாரித்து சிறு விவசாயிகளுக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல முறை மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்களுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் ஒரே நேரத்தில் தங்களின் பூர்விகமாக அனுபவித்து வந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்று ஆக்கிரமித்து வைத்திருந்த தேயிலை தோட்டத்தில் பசுந்தேயிலையினை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக தனியார் நிறுவனத்திற்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் இப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர். இதன் காரணமாக பெட்டட்டி சுங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆக்கிரமித்து வைத்திருந்த தோட்டத்தில் புகுந்து தேயிலை பறித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Ilitura ,Pettati Sungam ,Chennai ,
× RELATED புவி வெப்பமயமாதலை தடுக்க காற்றில்...